உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் மக்கள் நீதி மையத்தின் செயல்பாடுகள் ஒரு பார்வை.

மக்கள் நீதி மையம் கட்சியானது நிறைய பேர்கள் விலகிய பிறகும் தொடர்ந்து நடத்தி வருகிறார் கமல். கட்சியை கலைத்து விட்டு சென்று விடுவார் என்று நிறைய பேசி ,எழுதி வந்தார்கள் .ஆனால் கமல் தொடர்ந்து கட்சியை நடத்துகிறார் ,அரசியல் உள்ளவரை மக்கள் நீதி மையம் தொடர்ந்து இருக்கும் என்று அவர் அறிவித்துவிட்டர். தற்போது மேலும் சிக்கலாக பழ.கருப்பையா போன்றவர்கள் கட்சியை விட்டு விலகி விட்டார்கள். பழ கருப்பையா கட்சியை விட்டு சென்றது ஒரு பெரிய இழப்பு தான். கமல் தலைவர், பொதுச் செயலாளர் பதவிகளை தானே வைத்துக் கொண்டதும் பெரிய தவறு.  அவர் கருப்பையாவை பொதுச்செயலாளராக அறிவித்திருக்கலாம் தான். சினிமா, பிக் பாஸ் என்று பரபரப்பாக இருக்கும் நேரத்தில் பல கருப்பையாவை தமிழ்நாடு முழுவதும்  அனுப்பி பரப்புரைக் கூட்டங்களில் பேச வைத்திருக்கலாம். கமல் மற்ற தலைவர்கள்  தனக்கு போட்டியாக வந்துவிடுவார்களோ என்று பயப்படுகிறார் என்று நினைக்கிறேன். இதே பயம்தான் சீமான் உட்பட அனைத்து கட்சி தலைவர்களுக்கு உள்ளது ,இங்கே தான் அண்ணாத்துரை அவர்கள்  வித்தியாசப் படுகிறார் .புதிய தமிழ்நாடு உருவான சுமார் 70 ஆண்டு காலத்தில் அண்ணா ஒருவர் மட்டுமே தனிக்கட்சி துவங்கி ஆட்சி பிடித்திருக்கிறார் ,அதுவும் நல்லாட்சி என்று சொல்லப்பட்ட காமராஜரை எதிர்த்து அரசியல் செய்து ஆட்சியை பிடித்திருக்கிறார். கடைசி காலத்தில் காமராஜர் தேசிய அரசியலுக்கு திரும்பியதால் பக்தவச்சலம் போன்ற மோசமான நிர்வகிக்கப்பட்ட தலைவர்களிடம் காங்கிரஸ் சிக்கியபோது ,அண்ணா மிக எளிதாக ஆட்சியைப் பிடித்தார். காமராஜர் காலத்திலேயே அண்ணா வேகமாக வளர்ந்து வந்தார், அதற்கு காரணம் அண்ணாவின் தன்னம்பிக்கை தான். தன்னை மிஞ்ச யாரும் இல்லை  என்பது அண்ணாவுக்கு தெரியும். அவர் மற்றவர்களை வேலை வாங்கினார், கருணாநிதி ,நெடுஞ்செழியன் எம்ஜிஆர் என்று எல்லாரையும் எப்படி பயன்படுத்த வேண்டுமோ, அப்படி பயன்படுத்தினார். எம்ஜிஆருக்கு போராட்டங்கள் சென்று சிறை செல்வதற்கு தயக்கம் இருந்தபோது, அவரால் கிடைக்கும் வாக்குகளை இழக்க விரும்பாமல் அவருக்கு போராட்டங்களில் இருந்து விலக்கும அளித்திருந்தார். திமுக ,அதிமுக திராவிடர் கழகத்தில் பல பிளவுகள் ஏற்பட்டிருந்தாலும், அண்ணா காலத்தில் திமுகவில் எந்த பிளவு ஏற்படவில்லை. தற்போது திமுகவில் இருந்து பிரந்து பிரிந்த மதிமுக, அதிமுகவின் அவ்வப்போதைய பிளவுகள் மற்றும் தற்போது அமுமுக பிரிந்து சில பேர் ஊராட்சிகளில் வெற்றி பெறுவது மற்றும் திராவிடர் கழகத்திலிருந்து திமுக பிரிந்து திராவிடர் கழகத்தை விட பலமாக இருப்பது போன்ற எந்த செயல்களும் அண்ணா கட்சியில் நடைபெறவில்லை. அண்ணாவிடம் இருந்து  சம்பத் பிரிந்து சென்று தனிக் கட்சியை தொடங்கியிருந்தாலும, அவரால் பெரிய அளவில் கட்சியை நடத்த முடியவில்லை. காங்கிரஸில் இணைந்து விட்டார். புதிதாக வருபவர்களுக்கு அண்ணா போன்ற தன்னம்பிக்கை வேண்டும். விஜயகாந்த் கூட தன்னுடைய கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களை வளரவிடவில்லை, தான் மட்டுமே பெரிய தலைவராக இருந்தார் .அதுவே விஜயகாந்த் கட்சி பெரிய அளவில் வளராமல் போனப்போ போனதற்குக் காரணம். கமல் தன்னுடைய கட்சியில் சிறந்த பேச்சாளர்கள், சிறந்த நிர்வாகிகளை கண்டுபிடித்து தான் வேலயில் பரபரப்பாக இருக்கும் போதும் அவர்களை தமிழ்நாடு முழுவதும் அனுப்பி பரப்புரைகள் செய்து கட்சியை சரியாக நிர்வாகித்து கட்சியை வளர்க்க வேண்டும் .அப்படி செய்தால் இன்னும் பத்து பதினைந்து ஆண்டுகளில் மக்கள் நீதி மய்யம் மட்டுமல்ல எந்த ஒரு கட்சியாக இருந்தாலும் வெற்றி பெற முடியும் ,அல்லது இதேபோல் அரசியல் செய்தாலும் கமல் ஒரு நாளும் வெற்றி பெறமுடியாது மட்டுமல்ல கூட்டணி சேர்ந்து கணிசமான தொகுதிகளை கூட பெற முடியாது. எம்ஜிஆர் போன்று அரசியல் செய்வதாக கூறுகிறார், அதாவது சினிமாவில் இருந்து கொண்டு அரசியல் செய்வதாக,எம்ஜியார் அவர் தலைவராக இல்லாத காலத்திலேயே, திமுகவில் சாதாரண பேச்சாளராக இருந்த காலத்திலேயே அவர் பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டார். கமல் கூட சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு கோயம்புத்தூரில் ஒரு கூட்டத்தில் கலந்து கொள்ள இருந்தார் ஆனால் கோரானா காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. அதன் பிறகு கொரோனா குறைந்த பிறகும் கமல்  எந்த கூட்டங்களிலும் கலந்து கொள்ளவில்லை .அண்ணாவின் திமுக முதலில் நகரங்களிலேயே செல்வாக்கு பெற்று வந்தது. பின்னர் 2-3 தேர்தலுக்கு பிறகு எல்லா இடங்களிலும் செல்வாக்கைப் பெற்றார்கள். அதேபோல் கமல் கட்சியின் தற்போது நகர்ப்புறங்களில் வாக்கு களை பெற்றிருக்கிறது. எனவே குறைந்தபட்சம் மாதம் ஒரு முறையாவது சென்னை ,கோவை மதுரை ,திருச்சி, சேலம் போன்ற ஏதாவது ஒரு நகரங்களில் அரசியல் கூட்டங்களை நடத்துவது நல்லது. என்னதான் சினிமாவில் பரபரப்பாக இருந்தாலும், மாதத்தில் ஒரு நாளை ஒதுக்கி இந்த செயலை செய்ய வேண்டும். மேலும் கமலின் கட்சி வலுவாக இருக்கும் இடங்கள் சென்னை, ஸ்ரீபெரும்புதூர் ,காஞ்சிபுரம், திருவள்ளூர், கோயம்புத்தூர் போன்ற இடங்கள். வாரத்தில் ஒரு நாளாவது வட சென்னை ,தென் சென்னை, மத்திய சென்னை ,ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் என்று சென்னைக்கு அருகில் இருக்கும் இடங்களில் பரப்புரைக் கூட்டங்கள் அல்லது பொதுக்கூட்டங்களை நடத்தி இருக்கலாம் ,அதை அவர் செய்யவில்லை .இனிமேல் தன்னை திருத்திக் கொள்ள வேண்டும் கூட்டு முயற்சி வெற்றி தரும் என்பதை உணர்ந்து இரண்டாம் கட்ட தலைவர்களை உருவாக்க வேண்டும். கமல் கட்சிக்கு வந்த புதிதில் இருந்த வரவேற்பு, அதாவது வந்த முதல் தேர்தலிலேயே சுமார் மூன்றரை சதவீதத்திற்கு மேற்பட்ட வாக்கு பெற்ற  கமல் பின்னர் வந்த தேர்தல்களில் சறுக்கி வருகிறார். இத்தனைக்கும் பிரதமர் வேட்பாளர் யார் என்று சொல்லாமலே கமல் மூன்றரை சதவீத வாக்குகளை பெற்று வந்தார், முதல்வர் வேட்பாளர் தான்தான் என்று சொல்லியும் அதை விடக் குறைவான வாக்குகளை பெற்றுள்ளார் .அதற்கு காரணம் கமலின் அரசியல் பணி மிகக் குறைவு என்பதே. கமல் குறைந்தபட்சம் மாதம் ஒரு பொதுக்கூட்டங்களை நடத்தி தன்னுடைய கட்சியை வளர்க்கப் பர்க்க வேண்டும் என்பதே என்னுடைய கருத்து.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் நாடு தகவல் தொழில்நுட்ப நகர்களின் வகைப்படுத்துதல்.

தமிழக அமைச்சரவை ஒரு பார்வை தொடர்ச்சி-4,தகவல் தொழில்நுட்ப த்துறை.

வான் தமிழ்நாடு