பாஜக மூன்றாவது பெரிய கட்சியா?
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள், பேரூராட்சிகள் உறுப்பினர் இடங்கள் சிலவற்றை பெற்று நாங்கள்தான் தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய கட்சி என்று பாஜக மார் தட்டுகிறது. ஆனால் இந்த வாக்குகளை சட்டமன்ற, நாடாளுமன்ற தொகுதி வாரியாக மாற்றி பார்த்தோமேயானால், பிஜேபியும் முட்டை, நாம் தமிழர் மக்கள், நீதி மையம், ஆமமுக என எல்லா கட்சிகளுமே முட்டைதான் வாங்கும் .ஒரு இடங்களில் கூட இவர்கள் வெற்றி பெற முடியாது .பிஜேபி இந்த அளவுக்கு பெறக் காரணம் அவர்களை பணபலம் மற்றும் அவர்கள் மத்தியில் ஆட்சியில் இருப்பதால். காரணம் கடந்த சட்டமன்ற தேர்தலில் கூட பாஜக 13 கோடி ரூபாய் ஒரு சட்டமன்ற தேர்தலுக்கு செல விட்டதாகக் கூறுகிறார்கள். அதில் 4 கோடி ராஜா ஊழல் செய்து விட்டதாக கூறிய சில பிஜேபியை உறுப்பினர்கள் கட்சியை விட்டு விலகவும் செய்தார்கள், மற்றும் நீக்கப்பட்டார்கள். அதுபோல் இந்த முறைய அவர்கள் பணம் செலவழித்து வெற்றி பெற்றிருக்கலாம். மேலும் மத்தியில் அவர்கள் ஆட்சியில் இருப்பதாலும் ,அந்த அதிகாரத்தை பயன்படுத்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஏதாவது செய்வார்கள் என்ற எண்ணத்தில் கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் அவர்கள் சில இடங்களில் வெற்றி பெற்று இருக்கலாம். 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் பிஜேபி தனியாக தேர்தலை சந்திக்க வேண்டி வரும் நினைக்கிறேன் அப்போது அவர்கள் 3% வாக்குகளைத் தாண்ட மாட்டார்கள் .நாம் தமிழர் சுமார் 8 முதல் 10% வரை வாக்குகளை பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. மக்கள் நீதி மையம் கூட 4 சதவிகித வாக்குகளை பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. அப்படிப்பார்த்தால் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பிஜேபி நான்காவது அல்லது ஐந்தாவது இடத்திற்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
கருத்துகள்
கருத்துரையிடுக