விஜய் மக்கள் இயக்கம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் படுதோல்வி கண்டதா?

விஜய் மக்கள் இயக்கமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை மற்றும் அவர்களின் வெற்றி பெற்றவர்கள் கூட அந்த தொகுதிகளில் செல்வாக்கு பெற்றவர்கள் என்று கூறுகிறார்கள். விஜய் மக்கள் இயக்கம் விஜயின் போட்டோவை உபயோகப்படுத்துகிறார்கள் மேலும் அந்தந்த தொகுதிகளில் செல்வாக்கு உள்ள சுயேட்சையாக போட்டியிட்டு பவரகள் மற்றும் மாற்றுக் கட்சிகளில் வாய்ப்பு கிடைக்காதவர்களை தங்களது கட்சியின் வேட்பாளராக நிறுத்துவதாகவும் புகார் உள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தல் விஜய் மக்கள் இயக்கத்தினர் ஏற்கனவே என்று வந்தவர்களை தங்கள் கட்சியில் சேர்த்துக் கொண்டார்கள், இந்த முறை அப்படி சுயேட்சையாக வேண்ட வந்தவர்களை திமுகவை வளைத்துப் போட்டது அதனால்தான் விஜய் மக்கள் இயக்கம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றும் கூறுகிறார்கள். விஜய் மக்கள் இயக்கம் ஆனது எஸ்ஏ சந்திரசேகரன் தலைமையில் ஒரு பிரிவாகவும், விஜய் தலைமையில் ஒரு பிரிவாகவும் பிரிந்து கிடக்கிறது. அதிமுக ,அமமுக போல் இவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்ற கோரிக்கையை யாரும் வைக்கவில்லை. இவர்கள் ஒன்றிணைவது நல்லது .விஜய் இன்னும் 10 ஆண்டுகளுக்கு சினிமாவில் நடிப்பதை விரும்புவார் என்று நினைக்கிறேன் .அந்த பத்து ஆண்டுகளுக்குள் அவர் முதலமைச்சராகுவது கடினம்தான். கட்சியை வளர்த்தெடுக்க வேண்டியது உள்ளது. குறைந்தபட்சம் இதற்கு 10 முதல் 15 ஆண்டுகள் ஆகும். இந்த இடைப்பட்ட காலத்தில் விஜய் ரசிகர்களை நல்லமுறையில்  நிர்வகித்து வந்த எஸ்ஏ சந்திரசேகரன் அவர்களை விஜய் தமிழ் நாடு முழுவதும் சென்று பரப்புரை செய்வதற்கு பயன்படுத்திக்கொள்ளலாம் .2024 தேர்தலிலிருந்து விஜய் பரப்புரையில் ஈடுபடுவார் என நினைக்கிறேன். ஆனால் அவருடைய திரைப்பட தொழில் காரணமாக அவரால் தேர்தல் பிரச்சார மேடைகளில் மட்டுமே பரப்புரை செய்ய முடியும் பரப்புரையில் ஈடுபட முடியும் .மற்ற நேரங்களில் அவர் இரண்டு மூன்று மாதங்கள் வேண்டுமானால் கட்சிக்காக பரப்புரைகளில் பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ள முடியும் .ஆதனால் சந்திரசேகரை மற்ற நேரங்களில் அவர் பயன்படுத்திக் கொள்ளலாம். சந்திரசேகர் அவர்கள் தற்போது பெருமளவில் படங்களை இயக்குவது, நடிப்பது போன்ற தொழிலில் ஈடுபடுவதில்லை. எனவே அவரையே தமிழகம் முழுவதும் சென்று பரப்புரை செய்வதற்கு விஜய் பயன்படுத்திக் கொள்ளலாம. விஜய் கட்சியின் உண்மையான பலம் என்ன என்பதை வருகின்ற நாடாளுமன்ற (2024) தேர்தல் நிரூபிக்கும் என்று நினைக்கிறேன் பொறுத்திருந்து பார்ப்போம்.என்ன இருந்தாலும் விஜய் கட்சி மநிம,நாம் தமிழர் போன்ற கட்சிகளை விட அதிக வெற்றி பெற்று இருக்கிறது என்பதே உண்மை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் நாடு தகவல் தொழில்நுட்ப நகர்களின் வகைப்படுத்துதல்.

தமிழக அமைச்சரவை ஒரு பார்வை தொடர்ச்சி-4,தகவல் தொழில்நுட்ப த்துறை.

வான் தமிழ்நாடு