டென்மார்க் ஆடு மாடு மேய்த்து மட்டும் வளர்ச்சி அடையவில்லை:பாகம்-1

நாம் தமிழர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் டென்மார்க் என்ற ஒரு நாடு ஆடு மாடு மேய்த்து பணக்கார நாடாக ஆகிவிட்டது .நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆடுமாடு மேய்ப்பது அரசு வேலையாகும் என்றெல்லாம் கூறியிருக்கிறார. ஆடு ,மாடு மேய்ப்பது அரசு அரசு தொழில் ஆக்குவது நடைமுறையில் சாத்தியமே. குறிப்பாக ஆவின் நிறுவனமானது தங்கள் பால் கொள்முதல் செய்யும் கால்நடை வளர்ப்பாளர்களளிடம் உங்களுக்கு இவ்வளவு ஊதியம் தருகிறோம், நீங்கள் இவ்வளவு லிட்டர் பால் எங்களுக்கு தர வேண்டும். இதற்கு மேல் நீங்கள் பால் தந்தால் உங்களுக்கு அதற்கு ஏற்ற போனஸ் வழங்கப்படும் என்று கூறி, அதே செயல் முறையை பயன்படுத்தி அவர்களை அரசு ஊழியர்களாக ஆக்கலாம் .ஆனால் அரசு ஊழியர்களில், அதிக ஊதியம் பெறுபவர்கள் ஆசிரியர்கள், பொறியாளர்கள் போன்றவர்களாக இருக்கலாம்.மற்றவர்கள் அதே அளவு ஊதியம் பெறுவதில்லை. சீமான் கூட ஆடு,மாடு மேய்ப்பவர்களை அரசு ஊழியர்கள் ஆக்குவோம் என்று கூறினாரே தவிர, அவர்களுக்கு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்படும் என்று கூறவில்லை, அல்லது இப்போது  அவர்களுக்கு கிடைப்பதை விட இரண்டு, மூன்று மடங்கு ஊதியம் கிடைக்கும் என்றும் அவர் கூறவில்லை. மேலும் அவர் டென்மார்க் நாட்டை உதாரணமாக கூறியிருந்தார் டென்மார்க் நாடானது ,தமிழ்நாட்டுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட நாடாகும். கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்த பிறகு ஐரோப்பாவிலுள்ள குட்டி நாடுகள் கூட, நாடு பிடிக்க கிளம்பின .அப்போது டென்மார்க்கில் இருந்து ஒரு குழுவானது தமிழ்நாட்டின் தரங்கம்பாடியை வந்து சேர்த்தது. தரங்கம்பாடியில் டேனிஷ் கோட்டை உள்ளது, சிறிய நாடு என்பதால் பிரிட்டன் ,பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு எதிராக போட்டி போட முடியாமல் அவர்கள் தரங்கம்பாடி என்ற சிறு பகுதியுடன் திருப்தி அடைந்தார்கள். சுமார் 1600 லிருந்து 1947 ஆம் ஆண்டுவரை அல்லது அதைவிட சற்று குறைவாக அவர்கள் தரங்கம்பாடி ஆண்டார்கள் என்று நினைக்கிறேன். டென்மார்க் நாட்டவர்களின் மொழியானது டேனிசு என்று அழைக்கப்படுகிறது. அதை வைத்து அவர்கள் தரங்கம்பாடியில் கட்டிய கோட்டை டேனிசுக் கோட்டை என்று அழைக்கப்படுகிறது. டென்மார்க் காரர்கள் எனக்கு தெரிந்து இலங்கையில் எந்த  எந்த நகரத்தையும் எந்த இடத்தை கட்டி ஆண்டதாக சரித்திரம் இல்லை. ஆனால் இன்றைக்கு ஈழப் போருக்குப் பிறகு, நிறைய அகதிகள் டென்மார்க் நாட்டிற்கு சென்று, அங்கேயே குடியேறி குடியுரிமை பெற்று டென்மார்க் குடி மக்களாக வாழ்கிறார்கள. 

அவர்கள் உறவினர்களுக்கு அனுப்பி வரும் பணம் இன்று இலங்கையின் வடக்கு, கிழக்கு தமிழர் வாழும் பகுதி செழிப்பாக வைத்திருப்பதற்கும் உதவுகிறது.
உண்மையில் டென்மார்க் ஆனது கால்நடை வளர்ப்பில் சிறந்து விளங்குகிறது .அந்த நாட்டின் ஏற்றுமதியில் 25 சதவீதம் கூட கால்நடை வளர்ப்பில் இருந்து வருவதாக கூறுகிறார்கள். ஆனால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், அதாவது, மொத்த உள்நாட்டு வருமானத்தில் உயர்வு சுமார் 1.6 சதவீதம்தான் விவசாயம், கால்நடை, வளர்ப்பு மீன்பிடித்தல் போன்றவற்றின் மூலம் வருகிறது. அதுபோக சுமார் 15 சதவீதமானது, தொழிற்சாலைகள் மூலம் கிடைக்கக்கூடிய வருமானமாக உள்ளது. 
 அதாவது மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆக உள்ளது சுமார் 75% ஆனது சேவைத் துறை மூலமாக கிடைக்கிறது. அதாவது மெட்ரோ ரயில் ரயில்வே போக்குவரத்து சாலை போக்குவரத்து விமான போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு சேவைகள் போன்றவற்றின் மூலமாக கிடைக்கிறது. இப்படி சேவை துறையானது சுமார் 75% உள்நாட்டு உற்பத்தி மட்டுமல்லாமல், சுமார் 76 சதவீதம் பேர் வரை வேலை வாய்ப்பையும் வழங்குகிறது. டென்மார்க் நாட்டின் மொத்த மக்கள் தொகை சுமார் 54 லட்சம். தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகையானது தற்போது சுமார் 8 கோடி வரை  என்று கூறுகிறார்கள். அப்படிப் பார்த்தால் டென்மார்க் நாட்டின் மக்கள் தொகையை விட தமிழ்நாட்டின் மக்கள் தொகை சுமார் 16 மடங்கு அதிகம். ஆனால் டென்மார்க் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சுமார் 440 பில்லியன் அமெரிக்க டாலர்கள். தமிழ்நாட்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி சுமார் 330 மபில்லியன் அமெரிக்க டாலர்கள் மட்டுமே. அதாவது டென்மார்க்கின் டென்மார்க் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட சுமாராக 100 பில்லியன் குறைவு. நியாயப்படி பார்த்தால் டென்மார்க்கை விட 16 மடங்கு மக்கள் தொகை கொண்ட தமிழ் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 16 மடங்கு அதிகமாக இருந்தால் சுமார் 7 ஆயிரம் பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை இருக்க வேண்டும். ஆனால் தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது, வெறும் 350 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மட்டுமே வருகிறது .அதாவது டென்மார்க்கை விட 20 மடங்கு மக்கள் தொகை அதிகமாக உள்ள தமிழ்நாட்டில் உள்நாட்டு உற்பத்தியானது டென்மார்க் உடன் ஒப்பிட்டால் சுமார் 30%  குறைவாக உள்ளது .டென்மார்க் போன்ற மிக வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது அதன் சராசரி உள்நாட்டு உற்பத்தியில் பகுதியாவது, அதாவது சுமார் 3500 அமெரிக்க டாலர்கள் அளவுக்கு இருந்தாலும் தமிழ்நாட்டை பாராட்டி இருக்கலாம். ஆனால் தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது மிகக்குறைவாக உள்ளது. தமிழ்ந ட்டின் பொருளாதாரத்தில் சுமார் 53 சதவீதம் வரை சேவை துறையில் இருந்து வருகிறது .அதாவது மெட்ரோ ரயில், விமானம், சாலை போக்குவரத்து,தகவல் தொடர்பு போன்றவற்றில் இருந்து வருகிறது. 35 சதவீதம் தொழிற்சாலைகளில் இருந்து கிடைக்கிறது .சுமார் 15% விவசாயம் மூலம் கிடைக்கிறது. இதிலேயே மீன் பிடித்தல், கால்நடை வளர்ப்பு போன்றவையும் அடங்கும். ஒரு உதாரணமாக எடுத்துக் கொண்டால் டென்மார்க்கின் தலைநகரான கோபன்கன் சுமார் எட்டு லட்சம் மக்கள் தொகை கொண்டதாக உள்ளது. ஆனால் அங்கே சுமார் 160 கிலோமீட்டர் அளவுக்கு புறநகர் ரயில்வே ஓடுகிறது ,சென்னை எலக்ட்ரிக் ரயில்  இதுபோன்ற தொலைவுக்கு ஓடுகிறது. மேலும் சுமார் 38 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயல் ஓடுகிறது ,கிட்டத்தட்ட டென்மார்க் தலைநகரம் கோப்பன்கேகன் விட 12 மடங்கு மக்கள் தொகை கொண்ட சென்னை நகரில் சுமார் 500 கிலோ மீட்டர் அளவிற்கு சென்னை புறநகர் ரயில்வே உள்ளது மற்றும் சுமார் 50 கிலோ மீட்டர் அளவிற்கு மெட்ரோ ரயில் உள்ளது .இதுகூட கோபன்கன் மக்கள் தொகையுடன் ஒப்பிட்டால் 12 மடங்கு
இருந்திருக்க வேண்டும். அதாவது சுமார் 450 கிலோ மீட்டருக்கு மெட்ரோ ரயில்வே மற்றும் நகர்ப்புற நகர் ரயில்வே கூட சுமார் 2000 கிலோமீட்டர் வரை இருந்திருக்க வேண்டும், இருந்தாலும் சென்னையில் ஓரளவு உட்கட்டமைப்பு உள்ளது. ஆனால் அதற்கு அடுத்த நகரமான சுமார்25 லட்சம் மக்கள் தொகை கொண்ட,கோபன்கனை விட சுமார் மூன்று மடங்கு மக்கள் தொகை கொண்ட கோயம்புத்தூரில் இதுவரை மெட்ரோ ரயில் சேவ வரவில்லை மற்றும் புறநகர் ரயில் பாதை இதுவரை தொடங்கப்படவில்லை, நியாயப்படி பார்த்தால் கோயம்புத்தூரில் சுமார் 500 கிலோமீட்டர் அளவிற்கு புறநகர் ரயில்வே பாதை மற்றும் சுமார் 120 கிலோ மீட்டர் அளவிற்கு மெட்ரோ ரயிலில் இருந்து இருக்க வேண்டும், கோபன்கன் உடன் ஒப்பிடும்போது, ஆனால் இதுவரை வரவில்லை. இதேபோன்ற கோபன்கனை விட இரண்டு மடங்கு மக்கள் தொகை அதிகம் கொண்ட திருச்சி மதுரை போன்ற நகரங்களில் இதுவரை புறநகர் ரயில் பாதை மற்றும் மெட்ரோ ரயில் பாதை போன்றவை துவங்கப்படவில்லை. திருப்பூர், சேலம், திருநெல்வேலி போன்றவை கூட கோபமன்கனை விட அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்கள் அங்கும் இது வரை மெட்ரோ ரயில் போன்றவை துவங்கப்படவில்லை. இது போன்ற உட்கட்டமைப்பில் தமிழ்நாடு பின் தங்கியிருப்பதே தமிழ்நாட்டை வளர்ச்சி அடையாத நாடாக மாற்றுகிறது. கால்நடை வளர்ப்பு ,விவசாயம் மீன்பிடித்தல் போன்றவை தமிழ்நாட்டில் 15 சதவீதம் அளவுக்கு இருக்கிறது, ஆனால் வருங்காலத்தில் உட்கட்டமைப்பு மற்றும் தொழிற்சாலை உற்பத்திகள் அதிகரிக்கும்போது இது இன்னும் குறையும். வளர்ந்த நாடுகளில் கூட விவசாய உற்பத்தி தமிழ்நாடு போன்ற நாடுகளை விட அதிகமாக இருந்தாலும் அங்கு போக்குவரத்து மற்றும் தொழிற்சாலை உற்பத்தியானது அதைவிட மிகப்பரிய அளவில் இருப்பதால் அங்கு விவசாய உற்பத்தி 1.6% அளவுக்கு வருகிறது.அவர்கள் 1.6விவசாய உற்பத்தி மட்டுமே கொண்டவர்கள் என்பதனால், அவர்கள் விவசாயத்தில் நம்மை விடக் குறைந்தவர்கள் என்று அர்த்தமல்ல. அவர்களின் தொழில் மற்றும் உட்கட்டமைப்பு உற்பத்திகள் மிக மிக அதிகம், அடுத்ததாக நாம் எடுத்துக் கொண்டால் சுமார் எட்டு லட்சம் மக்கள் தொகை கொண்ட கோபன்கன் கோரானாவுக்கு முன்பாக, அதாவது 2019ஆம் ஆண்டு வரை மூன்று கோடி பயணிகளை கையாண்டு வந்திருக்கிறது. அப்போது சென்னை மாநகர் சுமார் இரண்டரை கோடி பயணிகளை மட்டுமே கையாண்டு வந்தது. கோயம்புத்தூர், மதுரை ,திருச்சி போன்ற கோபன்கனை விட இரண்டு, மூன்று மடங்கு மக்கள் தொகை கொண்ட மற்ற நகரங்கள் முறையே சுமார் 30 லட்சம் மற்றும் 15 லட்சம் வரை மட்டுமே கையாண்டு வந்திருக்கின்றன. சென்னையின் விமான பயணிகள் போக்குவரத்தை சுமார் 5 கோடி ,கோயம்புத்தூர் ,திருச்சி, மதுரை போன்றவற்றின்  விமான  பயணிகள் சுமார் ஒரு கோடி என்ற அளவில் கையாண்டிருந்தால், தமிழ்நாட்டில் வானூர்தி போக்குவரத்து துறை, விமான நிலையம் போன்றவற்றில் முதலீடுகள் நிறைய கிடைத்து, தொழில் வேலை வாய்ப்புகள் ஏற்பட்டிருக்கும். ஆனால் அப்படி நடைபெறவில்லை, இதிலிருந்து தெரிவது என்னவென்றால் தமிழ்நாடு வளர்ச்சியில் பின்தங்கி இருப்பதற்கு காரணம் உட்கட்டமைப்புகளில் வளர்ச்சி இல்லாமல் இருப்பது. தொழில்துறையில் கூட ஓரளவுக்கு வளர்ச்சி கண்டு  இருக்கிறோம். ஆனால் உட்கட்டமைப்புகள் தான் பெரிய அளவில் முதலீடுகள் மற்றும் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும். குறிப்பாக சென்னை மெட்ரோ ரயிலில் இதுவரை 22 ஆயிரம் கோடி ரூபாய் அளவு வரை முதலீடு செய்யப்பட்டுள்ளது, ஆனால் கூண்டாய் தொழிற்சாலையில் அந்த அளவுக்கு முதலீடு செய்யப்பட்டு இருக்குமா என்பது சந்தேகமே .தமிழக முதலமைச்சராக இருப்பவர்கள் கூட தொழிற்சாலை முதலீடுகளை பெற்று விட்டு நாங்கள் ஒரு லட்சம் கோடிக்கு போட்டு ஒப்பந்தம் போட்டிருக்கிறோம், இரண்டு லட்சம் கோடிக்கு ஒப்பந்தம் போட்டு இருக்கிறோம் என்று கூறி வருகிறார்கள். ஆனால் அதில் ஐந்து, பத்து சதவிகிதம் அதாவது ஒரு லட்சம் கோடிக்கு போட்டால் 20 ஆயிரம் கோடி ரூபாய் வேலை நடப்பதே பெரிய விஷயம் தான் என்ற நிலை தற்போது உள்ளது. தற்போது மத்திய அரசானது பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டங்கள் அமைக்கலாம் என்று கூறுகிறது. அப்படிப் பார்த்தால் தமிழ்நாட்டில் சென்னை, கோவை, சேலம் ,திருச்சி மதுரை,திருப்பூர், திருநெல்வேலி போன்றவை உகந்த நகரங்கள்.  குறைந்தபட்சம் 10,000 கோடி ரூபாய் செலவில் இந்த 7 நகரங்களில் மெட்ரோ ரயில் கொண்டு வந்தாலே சுமார் 70 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு கிடைத்து இருக்கும். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் நாடு தகவல் தொழில்நுட்ப நகர்களின் வகைப்படுத்துதல்.

தமிழக அமைச்சரவை ஒரு பார்வை தொடர்ச்சி-4,தகவல் தொழில்நுட்ப த்துறை.

வான் தமிழ்நாடு