டென்மார்க் ஆடு மாடு மேய்த்து மட்டும் வளர்ச்சி அடையவில்லை:பாகம்-2
மேலும் தமிழர்கள் நிறைய பேர் மத்திய கிழக்கு, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வேலை பார்க்கிறார்கள், இந்தியா முழுவதும் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களில் வேலை பார்க்கிறார்கள் .எனவே தமிழ்நாட்டில் விமான போக்குவரத்தை வளர்ச்சி அடைய செய்ய வாய்ப்பு உள்ளது, பெரும்பாலான விமான போக்குவரத்து துறை நிறுவனங்கள் டெல்லி, மும்பையை தளமாகக் கொண்டு தான் செயல் படுகிறார்கள். அவர்கள் சென்னைக்கு ஓரளவு சேவைகள் வழங்கினாலும் கூட மற்ற தமிழ் நாட்டு நகர்களில் குறைவான சேவைகளை வழங்குகிறார்கள். எனவே தமிழக அரசு தனியாக வான் தமிழ்நாடு என்ற விமான சேவையை துவங்கி,வானூர்தி போக்குவரத்திற்கு மறுமலர்ச்சிக்கும் அளிக்க வேண்டும். பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்க ,அதிகரிக்க இந்திய மான போக்குவரத்து வளர்ச்சி கழகமானது ,விரிவாக்க பணிகளை செய்யும் இதன் மூலம் கோடிக்கணக்கான அளவில் பணம் முதலீடு செய்யப்படும் .தமிழ்நாட்டில் இதனால் ஆயிரக்கணக்கானோருக்கு வேலை கிடைக்கும்.விவசாயம், கால்நடை வளர்ப்பு, மீன் பிடித்தல் போன்றவை முக்கியமான துறைகள்தான் அதை உணர்ந்த தமிழக அரசு ஏற்கனவே நிறைய கடன்களை வருகிறது ,மீனவர்களுக்கும் தனியாக கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் வழங்கப் போவதாக கூறுகிறது அல்லது அதே நேரத்தில், இது போன்ற உட்கட்டமைப்பு தமிழ்நாடு முன்னேறி செல்ல வேண்டும் .அப்போதுதான் தமிழ்நாட்டில் இருந்து படித்து முடித்தவர்கள், பட்டதாரிகள், பொறியாளர்கள், தொழில்நுட்பவியலாளர்கள் போன்றவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் .தமிழ்நாடு உட்கட்டமைப்புகளில் வளர்ச்சி அடைந்தால்தான் வளர்ந்த நாடாக மாறுவதற்கான வாய்ப்பு உள்ளது. சீமான் கூறியது போல் வரும் ஆடு, மாடு மேய்த்து மட்டுமே டென்மார்க் வளர்ந்த நாடாக மாற வில்லை ,அவர்கள் தங்கள் நாட்டில் மிகச் சிறந்த நகர வளர்ச்சித் திட்டங்கள் ,மெட்ரோ ரயில் புறநகர் போன்றன நகர வளர்ச்சித் திட்டங்கள், விமான நிலையங்கள் துறைமுகங்கள் போன்ற அடிப்படை கட்டமைப்பு திட்டங்களை கொண்டு வளர்ந்த நாடாக இருக்கிறார்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக