இலங்கை ஜனாதிபதியின் வீட்டுக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் இராணுவ பேருந்துக்கு தீவைப்பு.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வீடு அமைந்துள்ள பகுதியில் அவரது வீட்டுக்கு செல்லும் வழியை முற்றுகையிட்டுள்ள எதிர்ப்பாளர்கள் மீது தண்ணீர் தாரை தாக்குதல் மற்றும் கண்ணீர் புகை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பொலிஸார் இந்த தாக்குதலை நடத்தி வருவதுடன் போராட்டகாரர்கள் தொடர்ந்தும் அந்த இடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்கள், பொலிஸாரின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

சமையல் எரிவாயு மற்றும் எரிவாயு தட்டுப்பாட்டு நடவடிக்கை எடுக்குமாறு கோரி இவர்கள் கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் மத்தியியில் அரசாங்கம் தொடர்பாக பெரும் கொந்தளிப்பான நிலைமை ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதியின் வீட்டுக்கு அருகில் கொழும்பின் பல பகுதிகளை சேர்நத மக்கள் பலர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.

கொழும்பில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, கொழும்பு மத்தி, நுகேகொட பொலிஸ் பிரிவுகளில் உடன் அழுலாகும் வகையில் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீள் அறிவிப்பு வரும் வரையில் ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, களனி மற்றும் கல்கிசை பொலிஸ் பிரிவுகளிலும் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனாதியதின் இல்லம் முற்றுகையிடப்பட்டு இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமைச்சர்களின் வீடுகளுக்கு இராணுவ பாதுகாப்பு :

அரசாங்கத்தில் உள்ள முக்கிய அமைச்சர்களின் வீடுகளுக்கு இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கமைய, நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனாதிபதியின் இல்லம் முற்றுகையிடப்பட்டு இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், சற்றுமுன்னர் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும்,கொழும்பு மிரிஹான பிரதேசத்தில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வீடு அமைந்துள்ள பகுதியில் அவரது வீட்டுக்கு செல்லும் வழியை முற்றுகையிட்டுள்ள எதிர்ப்பாளர்கள் மீது தண்ணீர் தாரை தாக்குதல் மற்றும் கண்ணீர் புகை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பொலிஸார் இந்த தாக்குதலை நடத்தி வருவதுடன் போராட்டகாரர்கள் தொடர்ந்தும் அந்த இடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்கள், பொலிஸாரின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

நள்ளிரவு தாண்டியும் தீவிரமடையும் போராட்டம்!


நுகேகொடை - மிரிகான - பெங்கிரிவத்தை பகுதியில் இன்று ஜனாதிபதியின் இல்லத்திற்குச் செல்லும் வீதியில் மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

நேற்றிரவு நுகேகொடை − மிரிஹான பகுதியிலுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் வீட்டை பல மணி நேரமாக ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். 

ஆயிரக்கணக்கான இளைஞர், இளம் பெண்கள் ஒன்றிணைந்து போராட்டத்தை நடத்தி வரும் நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்காக பாதுகாப்பு பிரிவினர் தடியடி , கண்ணீர் புகை வீச்சு மற்றும் நீர் பீச்சியடிக்கப்பட்டது.

மேலும், பாதுகாப்பு பிரிவிற்கு சொந்தமான பேருந்து ஒன்றை ஆர்ப்பாட்டக்காரர்கள் தீ வைத்து சேதப்படுத்தினர். ஆர்ப்பாட்டம் காரணமாக பல சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, பாதுகாப்பு பிரிவிற்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் பலர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன்,தொடர்ந்தும் கண்ணீர் புகை குணடு வீச்சு நடத்தப்பட்டு வருகின்றது.

இவ்வாறான சூழ்நிலையில், தொடர்ந்தும் ஆயிரக்கணக்கானோரின் பங்குப்பற்றுதலுடன் போராட்டம் தொடர்கின்றது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் நாடு தகவல் தொழில்நுட்ப நகர்களின் வகைப்படுத்துதல்.

தமிழக அமைச்சரவை ஒரு பார்வை தொடர்ச்சி-4,தகவல் தொழில்நுட்ப த்துறை.

வான் தமிழ்நாடு