சென்னை-ஓசூர், சென்னை-தகடூர் ரயில் பாதை/சேவை வேண்டும்.

மத்திய அரசால் தமிழ்நாட்டில் கிடப்பில் போடப்பட்ட ரயில்வே திட்டங்களை விரைந்து செயல்படுத்த கோரி பாமகவினர் போராட்டங்களை அறிவித்து இருக்கிறார்கள். இது மிகவும் நல்லது அன்புமணி அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார், அவர் நாடாளுமன்றம் செல்வதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. அவர் நாடாளுமன்றத்தில் இதே கோரிக்கைகளை வைக்கலாம் என்பது என்னுடைய கருத்து..
,தர்மபுரி - மொரப்பூர் ரயில் பாதை திட்டத்தை விரைந்து செயல்படுத்த வலியுறுத்தி, பா.ம.க., சார்பில், தர்மபுரி ரயில்வே நிலையம் முன், தொடர் முழக்க போராட்டம் நடத்தி இருக்கிறார்கள்..

இதில், பா.ம.க., தலைவரும் பென்னாகரம் எம்.எல்.ஏ.,வுமான ஜி.கே.மணி பேசியதாவது: தமிழகத்தின் பெரும்பாலான மாவட்ட தலைநகரிலிருந்து சென்னைக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

தர்மபுரியில் இருந்து மொரப்பூருக்கு இணைப்பு ரயில்வே பாதையின்றி, தர்மபுரியிலிருந்து சென்னைக்கு ரயில் இயக்க முடியாத நிலை தொடர்கிறது. பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி, மத்திய ரயில்வே அமைச்சர்களை தொடர்ந்து சந்திந்து பேசியதால், சில ஆண்டுகளுக்கு முன், தர்மபுரி - மொரப்பூர் ரயில்வே பாதை திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. மத்திய அரசு நிதி ஒதுக்காததால், இப்பணி கிடப்பில் உள்ளது.
இதேபோல் தமிழகத்தில் மேலும் எட்டு ரயில்வே திட்டங்களையும், மத்திய அரசு கிடப்பில் போட்டுள்ளது. கிடப்பில் போட்டுள்ள அனைத்து ரயில்வே திட்டங்களுக்கும் உரிய நிதி ஒதுக்கி, பணிகளை முடிக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.
இதுபற்றிய எனது கருத்து:
 தர்மபுரி மட்டுமல்ல ஓசூர் போன்ற தொழில் நகரங்களில் கூட சென்னையுடன் நேரடி இணைப்பு இல்லாமல் இருக்கிறது. கிருஷ்ணகிரி கூட இல்லாமல் இருக்கும் என்று நினைக்கிறேன், காரணம் சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் ரயில்வே பாதையானது ஆந்திரா வழியாக சென்றடைகிறது. எனவே ஓசூரில் இருந்து வேலூர் மாவட்டத்திற்கு ரயில்வே தண்டவாளம் இணைத்துக் கொடுத்தால் சென்னையுடன் இணைக்கலாம்.
 அதற்காகவும் பாமகவினர் போராட வேண்டும். நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் .மேலும் பாமகவினர்  வன்னியர் வாழும் பகுதிகளில் மட்டுமல்லாமல் தமிழகம் முழுமைக்குமான  கிடப்பில் போடப்பட்ட மற்றும் மந்த கதியில் நடந்து வரும் ரயில்வே பணிகளுக்காக போராட்டங்கள் மற்றும் நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்த வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் நாடு தகவல் தொழில்நுட்ப நகர்களின் வகைப்படுத்துதல்.

தமிழக அமைச்சரவை ஒரு பார்வை தொடர்ச்சி-4,தகவல் தொழில்நுட்ப த்துறை.

வான் தமிழ்நாடு