RRR விமர்சனம் முழுவதும்.
RRR திரைப்படம் சமீபத்தில் பார்த்தேன். ரத்தம், ரணம் ,ரௌத்திரம் என்று 3 R -களுக்கும் பொருள் கொடுத்திருந்தார்கள். ராஜமௌலியின் மற்ற படங்கள் போலவே இந்த படத்திலும் பிரமாண்டமான காட்சிகள், சில புரியாத பிரமாண்டமாக காட்சிகள், துணி வீசி காப்பாற்றுவது போன்ற காட்சிகள் உண்டு. படத்தில் இரண்டு கதைகள் உண்டு ,ஒன்று பைபிளில் வரும் ஒரு கதை போன்றது. அதாவது 100 ஆடு வைத்திருக்கும் மேய்ப்பன், நூறில் ஒரு ஆடு காணாமல் போனாலும் அந்த 99 ஆடுகளை விட்டுவிட்டு அந்த ஒரு ஆட்டைத் தேடி அலைவான், அதை கண்டடைந்த பின்பு மகிழ்ச்சி அடைவான் என்று இயேசு ஒரு உவமைக்கதை கூறுவார். அதுபோன்று காடுவாழ் மக்களில் ஒரு சிறுமியை வெள்ளைக்காரர்கள் பிடித்துக்கொண்டு போகிறார்கள். உலக வல்லரசான இங்கிலாந்தின் ஆட்சியை எதிர்த்து எப்படி ஒரு பழங்குடியினர் தங்கள் சிறுமியை மீட்டு எடுக்கிறார்கள் என்பது ஒரு கதை, இன்னொரு கதை சுதந்திரப் போராட்டத்தில் போராடியவர்களின் வாழ்க்கையுடன் ஒத்துப்போகிறது. குறிப்பாக கமல் மருதநாயகம் என்று ஒரு படம் எடுக்க இருந்தார் ,அந்த படத்தில் கதாநாயகன் 15 வயது வரை மருதநாயகம் ஆக இருப்பான் ,பின்னர் அவன போரில் தன்னுடைய குடும்பத்தை இழந்து ,ஒரு இஸ்லாமியர் ஒருவரால் எடுத்து வளர்க்கப்பட்டு யூசுப் கான் என பெயர் மாற்றம் செய்யப்படுவான். அப்படிப் பார்த்தால் படத்தின் பெயர் யூசுப்கான் அல்லது பின்பு அவருக்கு வெள்ளையர்கள் கொடுத்த பட்டம் கான்சாஹிப் என்று இருந்திருக்க வேண்டும். ஆனால் ஏனோ தெரியவில்லை மருதநாயகம் என்று அவன் வெளியில் தெரியாத போது ,அதாவது 15 வயதுக்குள் இருந்த பெயரை படத்தின் தலைப்பாக வைத்திருக்கிறார் .அந்த கதையானது பொன் அந்தி என்ற பெயரில் நாவலாக வெளிவந்து உள்ளது. நீங்கள் படித்தால் தெரிந்து கொள்ளலாம் , போரினால் குடும்பத்தை இழந்த யூசுப்கான் என்கிற மருதநாயகம் தமிழ்நாடு இப்படி போரில் சிக்கி சின்னாபின்னம் அவதற்கு காரணம் ,தமிழ் மன்னர்கள் பிரிந்து கிடப்பதே. அவர்கள் பிரிந்து கிடப்பதோடு தங்களுக்குள் சண்டையிட்டு விட்டு, வெள்ளையர்களிடமும் சண்டையிட்டுக் கொள்கிறார்கள் .இதனால் போர் செலவிற்காக மக்களை வரி பணததிற்காக கசக்கிப் பிழிகிறார்கள். மக்களை காப்பாற்றுவதற்கு ஒரே வழி பிரிட்டிஷ்காரர்கள் துணையுடன், தமிழ் மன்னரின் அனைவரையும் அழித்து, ஒழித்து, முழு தமிழ்நாட்டை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து தான் ஆள வேண்டும். அப்போதுதான், சமாதானம் நிலவும் மக்களும் வளமுடன் இருப்பார்கள் என்று மருதநாயகம் முடிவுசெய்து, பிரிட்டிஷ் படையில் சேர்கிறார். பின்னர் சில தமிழ் மன்னர்களை பிரிட்டிஷ்காரர்களுடன் சேர்ந்து அழிக்கவும் செய்கிறான். பின்னர் பிரிட்டிஷ்காரர்கள் அவனை அந்த பகுதியினர் ஆளுனர் ஆக்குகிறார்கள். சிறப்பாக நிர்வாகம் செய்யும் மருதநாயகம், ஒரு கட்டத்திற்கு மேல் அவனே வரி செலுத்த மறுத்து தனி நாடக அறிவிக்கிறான். இதனால் பிரிட்டிஷ்காரர்கள் அவன் மீது போர் செய்து அவனை கொன்று விடுகிறார்கள். இதே கதைதான் படத்தில் வரும் சிரஞ்சீவி மகன் கதை. அவருடைய அப்பா காவல் துறையில் பணிபுரிகிறார் காவல்துறை இந்தியர்களை கொடுமைப்படுத்துவதை கண்டு, காவல் துறையிலிருந்து விலகி அவர் தனி போராளி படைகளை அமைக்கிறார். பின்னர் சண்டையில் கொல்லப்படுகிறார். அப்போது அவரிடம் போதிய ஆயுதங்கள் இல்லாமல் தோற்றம் என்பதை மகனுக்கு உணர்த்தி, பிரிட்டிஷ் படையில் சேர்ந்து நம் மக்கள் அனைவரின் கையிலும் ஆயுதங்கள் கிடைக்கச் செய்ய வேண்டும். அப்போதுதான் நம் மக்கள் வெற்றி பெற முடியும் என்று சொல்கிறார். அதற்காக ராம்சரண் அவர்கள் பிரிட்டிஷ் படையில் இருந்து சேர்ந்து தன்னுடைய லட்சியத்தை அடைவதற்காக பிரிட்டிஷ்காரர்களின் நன்மதிப்பை பெறுவதற்காக பிரிட்டிஷ்காரர்களை எதிராக போராடும் மக்கள், தலைவர்களை அடக்குவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார். பிரிட்டிஷ்காரர்களுக்கு ஆதரவாக இந்தியர்களை அடக்கி ஒடுக்கி விடுகிறார் .இதனால் பிரிட்டிஷ்காரர்கள் செருப்பை நக்கி பிழைப்பவன் என்று இந்தியர்களால் கூறப்படுகிறார். இந்த நிலையில் அவரும் சிறுமியை மீட்க வந்த ஜூனியர் என்டிஆரும் நண்பர்களாகிறார்கள். என்டிஆர் அவர்கள் சிறுமியை மீட்கும் முயற்சியில் ஈடுபடும்போது அது ராம்சரண் அவர்களால் முறியடிக்கப்பட்டு அவர் பிரிட்டிஷ் காரர்களால் தண்டனைக்கு ஆளாகிறார். அவர் மண்டியிட்டு மன்னிப்பு கேட்க மறுக்கிறார் ,இதனால் கடுமையான சாட்டையடிக்கு ஆளாகிறார். இவை அனைத்தும் பொதுமக்கள் வெளியில் நடைபெறுகிறது. அப்போது அவர் போடும் தேசியபாடலால் எழுச்சியுற்ற மக்கள் பிரிட்டிஷ் படைக்கு எதிராக போராடுகிறார்கள். பின்னர் பிரிட்டிஷ்காரர்கள் அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கிறார்கள். இதுவரை தன்னுடைய லட்சியத்தை அடைவதற்காக என்ன வேண்டுமென்றாலும் செய்வேன் என்று இருந்த ராம் சரண் தற்போது மனம் மாறுகிறார். ஜூனியர் என்டிஆர் ஐ தூக்கில் இருந்து காப்பாற்றுவது மற்றும் சிறுமியை மீட்டு கொடுப்பது ஆகியவற்றிற்கு துணை போகிறார். பின்னர் அவர் பிரிட்டிஷ் காரர்களால் கைது செய்யப்பட்டு பாதாளச் சிறையில் அடைக்கப்படுகிறார். அவரின் காதலியான ஆலியாபட் அவர்களுக்கு ஜூனியர் என்டிஆர் வாக்குக் கொடுக்கிறார், நான் அவரை மீட்டு வருவேன் என்று. அதற்கு முன்பு ஜூனியர் என்டிஆருக்கு இவரின் லட்சியம், இவரின் தந்தை ஒரு போராளி என்பது தெரியாது ,அவரது காதலியை எல்லாத்தையும் விளக்கிக் கூறுகிறார். அந்த லட்சியத்திற்காக தான் அவர் இவ்வளவு நாள் காத்து இருந்தார். இப்போது அவரை முக்கிய அதிகாரியாக, அதாவது ஆயுதங்களை காவல் காக்கும் அதிகாரியாக பிரிட்டிஷ்காரர்கள் நியமித்து இருந்தார்கள். அந்த வேளையில் உன்னை காப்பாற்றுவதற்காக அவர் சிறை சென்றிருக்கிறார் என்று கூறுகிறார், தான் அவரை தேடி வந்து இருப்பதாகவும் கூறுகிறார். இதை உணர்ந்த ஜூனியர் என்டிஆர் ராம்சரண் அவர்களை சிறையில் இருந்து விடுவித்து, பிரிட்டிஷ்காரர்கள் அரண்மனை மற்றும் ஆயுதக் கிடங்கை இரண்டு பேரும் சேர்ந்து வெடிவைத்து கொளுத்துகிறார்கள். மேலும் அதிலிருந்து சில ஆயுதங்களை ஜூனியர் என்டிஆர் கைப்பற்றிக் கொண்டு வருகிறார். அதை வைத்து ராம்சரண் போராளிக் குழுக்களை உருவாக்கப் போகிறார். இதுதான் இந்த படத்தின் கதை, இந்த படமானது பிரிட்டிஷ்காரர்கள் ஆட்சியில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று கூறுபவர்களுக்கு ஒரு பாடமாகும். பிரிட்டிசுகாரர்கள் மட்டுமல்ல யாராக இருந்தாலும் அந்நியர்கள் நம்மை ஆளும் போது எப்படி நடத்துவார்கள் என்பதற்கு இந்த படம் ஒரு உதாரணம். மற்றபடி படத்தில் நிறைய லாஜிக் மீறல்கள் உண்டு என்றாலும், பிரமாண்டம் மற்றும் ஓரளவு நம்பக்கூடிய திரைக்கதையில் ராஜமவுலி வென்றிருக்கிறார்.
கருத்துகள்
கருத்துரையிடுக