நிர்வாணப்படுத்தலை ஏன் சிங்களவர்கள் ரசிக்கின்றனர்.(படித்த முக்கிய கட்டுரை)
இலங்கை மீளவும் தீப்பற்றி எரியத்தொடங்கியிருக்கின்றது. கடந்த 70 வருட காலமாக இடம்பெற்ற வன்முறைகளில் இந்நாட்டின் பெரும்பான்மையினராகிய சிங்கள காடையர்கள் தமிழர்களைத் தாக்குவார்கள். அல்லது முஸ்லிம்களைத் தாக்குவார்கள். அவர்தம் சொத்துக்களை சூறையாடுவார்கள். தீ வைப்பார்கள். தாம் தாக்கும் இனத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள், கர்ப்பிணித் தாய்கள் என எந்த வித்தியாசமும் பார்க்காது அடித்துத் துன்புறுத்திக் கொல்வார்கள். இறுதியில் அகப்படுபவரை நிர்வாணமாக்கி தெருத்தெருவாக இழுத்துச் சென்று இன்புறுவார்கள். இவையனைத்தையும் செய்துமுடிக்க அவர்களுக்கு ஒரு சாராயப் போத்தல் போதுமானதாகும்.
இப்போது 2022. உலகம் நவீன தொழில்நுட்பத்துறையில் அசுர வளர்ச்சி கண்டிருக்கிறது. மனித விழுமிய மாண்புகளும், சக உயிரினங்களுக்கு அளிக்கப்பட வேண்டிய உரிமைகள் குறித்தெல்லாம் பரவலான விழிப்புணர்வு ஏற்பட்டுவருகின்றது. இந்நிலையில் சிங்கள காடையர்களோ மீண்டும் வன்முறையில் இறங்கியிருக்கின்றனர். ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் அதிகார இருப்பிற்காக பலியிடப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
நன்றி தமிழ்வின் .முழு கட்டுரையை இணைப்பில் காண்க.
கருத்துகள்
கருத்துரையிடுக